நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டமாக 6 வேட்பாளர்களை அறிவித்தார்.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நித்தியா அருண் போட்டியிடுவார் என்றும், வீரபாண்டி தொகுதியில் ராஜேஷ் குமார் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார் போட்டியிடுவார், கெங்கவள்ளியில் அபிராமி போட்டியிடுவார், ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னத்துரை போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி இன எழுச்சி மாநாட்டில் மீதமுள்ள வேட்பாளர்களை அறிவிப்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.