ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு பயணி ரயிலில் பயணிக்கத் தயாராக இருந்தபோது, அங்கு சமோசா விற்றுக் கொண்டிருந்தவரிடம் சமோசா வாங்கியுள்ளார். ஆனால், ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முயன்றபோது, அவரது பணப் பரிவர்த்தனை வேலை செய்யவில்லை. கையில் பணமும் இல்லாததால், பயணி பணத்தை உடனடியாக செலுத்த முடியாமல் தவித்தார். இதனால் கோபமடைந்த சமோசா விற்பனையாளர், பயணியை ரயிலில் இருந்து இழுத்து கீழே தாக்கி, பணத்தை உடனே செலுத்துமாறு கூறியுள்ளார்.
View this post on InstagramA post shared by India Today (@indiatoday)
பயணி பலமுறை ஆன்லைன் மூலம் பணம் அனுப்ப முயற்சித்தும் முடியாமல் போனது. ரயில் புறப்படும் நேரம் நெருங்க, அவர் விற்பனையாளரிடம் கெஞ்சியும் பயனில்லை. இறுதியாக, பயணி தனது கையில் இருந்த ஸ்மார்ட் வாட்சை கழற்றி விற்பனையாளரிடம் கொடுத்துவிட்டார். ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் (ஆர்.பி.எஃப்) சமோசா விற்பனையாளரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், பயணத்தின்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மட்டுமே நம்பாமல், கையில் பணம் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.