Dude: டிராகனை தாண்டிய டியூட்!.. முதல் நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?!...
CineReporters Tamil October 19, 2025 04:48 PM

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் டியூட். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது.

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் லவ் டுடே படம் மூலம் நடிகராக மாறினார். அந்த படம் நல்ல வசூலை பெற்றதால் டிராகன், LIK, Dude ஆகிய மூன்று படங்களிலும் நடித்தார். இதில் டிராகன் படமும் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்போது Gen Z என சொல்லப்படும் 20லிருந்து 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறி இருக்கிறார். எனவே நேற்று வெளியான டியூட் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு ஜாலியான கலகலப்பான குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படமாக டியூட் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் வெளியான முதல் நாளில் இப்படம் உலக அளவில் 22 கோடியை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் படத்தின் வசூலை விட அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பே 35 கோடி லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்திருந்தது.

டியூட் படத்திற்கு போட்டியாக மாரி செல்வராஜின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் வருகின்ற ரிசல்ட்டையும், ரசிகர்கள் கொடுத்துள்ள ஆதரவையும் பார்க்கும்போது மற்ற இரண்டு படங்களையும் விட டியூட் படமே அதிக வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. இப்படி நடந்தால் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நடிகர்கள் லிஸ்டில் பிரதீப் ரங்கநாதனும் சேர்ந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.