"டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால்.... திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்..!
Top Tamil News October 19, 2025 04:48 PM

நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

எனவே, "டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. என தெரிவித்துள்ளார் 

இவ்வாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.