Dude: இந்த வருஷ தீபாவளி பிரதீப்புக்குதான்!.. டியூட் கலெக்ஷன் அள்ளுதே!.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!...
CineReporters Tamil October 19, 2025 11:48 PM

லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் மூலம் 2K கிட்ஸ்களின் நாயகனாக மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். தன்னுடைய ரசிகர்கள் 2k கிட்ஸ்கள்தான் என்பதை புரிந்து கொண்ட பிரதீப் அவர்களுக்கு பிடித்தது போன்ற, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களும் இவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறது.

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படம் மூலம் நடிகராக மாறினார் பிரதீப். அதன்பின் வெளியான டிராகன் படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே தற்போது கோலிவுட்டில் ஒரு முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார். கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த Dude திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தீபாவளி விருந்தாக வெளியானது.

இந்த படத்தில் மமீதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் காட்சி வெளியானது முதலே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களை இந்த படம் கவரவில்லை என்றாலும் 2k கிட்ஸ்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். தற்போது தியேட்டருக்கு சென்று அதிகம் படம் பார்ப்பது அவர்கள்தான் என்பதால் முதல் நாளிலிருந்து படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

முதல் நாளே உலகளவில் இப்படம் 22 கோடி வசூல் ஆனதாக இப்படத்தை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் இப்படம் 45 கோடி வசூல் செய்திருப்பதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்திருக்கிறது.

இப்படியே போனால் இன்னும் 3 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டி விடும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு போட்டியாக பைசன், டீசல் ஆகிய படங்கள் வந்தாலும் இந்த வருட தீபாவளி பிரதீப்புக்க்கே சிறப்பாக அமைந்திருக்கிறது. லவ் டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து அவரின் LIK திரைப்படம் வருகிற டிசம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.