தீபாவளி பண்டிகை 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்ட பின்னர், மறுநாள் (21-ந்தேதி) மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் மூடப்பட உள்ளன.
இதன்படி, மாநகராட்சியின் அறிவிப்பில், கால்நடை மருத்துவப் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக் கூடங்களும் 21-ந்தேதி அரசு உத்தரவின்படி மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜெயின் கோவில்களுக்குச் சுற்றளவு 100 மீட்டர் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த உத்தரவினை முழுமையாகப் பின்பற்றவும், முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?