அடி வயிற்றில் சேரும் கொழுப்பை எந்த பானத்தின் மூலம் கரைக்கலாம் தெரியுமா ?
Top Tamil News October 20, 2025 12:48 PM

பொதுவாக நம் உடலில் அதிக கொழுப்பு படியும் இடம் எதுவென்றால் நம் அடி வயிற்று பகுதிதான் .இந்த அடி வயிற்றில் சேரும் கொழுப்பானது நமக்கு பல்வேறு பாதிப்புகளை கொடுக்கிறது .கொலஸ்ட்ரால் முதல் நீரிழிவு நோய்கள் வரை உண்டாக இந்த அடிவயிற்று கொழுப்பு காரணம் .எனவே இந்த கொழுப்பை எப்படி இயற்கை முறையில் இரு பானம் தயாரித்து எப்படி கரைக்கலாம் என்று பாக்கலாம் 

1.முதலில் தண்ணீரை சூடாக்கி கொள்ளவும் அதில் அதில் இலவங்கப்பட்டை கொஞ்சம் சேர்க்கவும்.
2.அடுத்து தண்ணீரில் தேன் சேர்க்கவும் .தேன் சேர்ப்பதற்கு முன், குறைந்தபட்சம் அந்த தண்ணீரை அரை மணி நேரம் குளிர வைக்கவும். 
3.அந்த தேனில் இருக்கும் சக்தி வாய்ந்த என்சைம்களை வெப்பம் செயலிழக்கச் செய்கிறது. 
4.பின்னர் இந்தப் பொருட்களை கலந்து இந்த பானத்தை உட்கொள்ள கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிக்கும் 
5.அடுத்து திராட்சைப்பழம் மற்றும் வெள்ளரியை கொண்டு கொழுப்பை கரைக்கும் ஒரு பானம் தயாரிக்கலாம் 
6.முதலில் வெள்ளரிக்காயுடன் துண்டாக்கிய லெமன் துண்டுகள் எடுத்து கொள்ளவும் 
7.அடுத்து திராட்சைப்பழம் சிலவற்றுடன் தண்ணீர்250 மிலி  எடுத்து கொள்ளவும் 
8.அடுத்து மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும் நறுக்கவும்.
9.அடுத்து அந்த பொருளை  தண்ணீருடன் ஒரு பிளெண்டரில் போடவும்.
10.பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலக்கி தினம்  குடிக்க, கூடிய விரைவில் கொழுப்பு கரையும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.