பொதுவாக சக்கரை நோயை சிலர் அலட்சியப்படுத்தி வருகின்றனர் .இதனால் கிட்னி ,இதயம் ,கண் போன்ற உருப்புகள் பாதிப்படையும் ,எனவே சுகர் பேஷண்டுகள் பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் அவர்கள் உடலில் சுகர் அளவு உயராமல் பாதுகாக்கலாம்
1.சில சுகர் பேஷண்டுகள் அரிசி சாதம் அதிகம் சாப்பிடுவர் .ஆனால் சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.
2.மேலும் சுகர் பேஷண்டுகள் சிவப்பு அரிசி, மட்டை அரிசி, கைக்குத்தல் அரிசி போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
3.அரிசியில் மாவுச்சத்து , கார்போ ஹைட்ரேட் இருப்பதால் இது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
4.சர்க்கரை நோயாளிகள் பாலில் காய்ச்சப்பட்ட கஞ்சிகளை எடுத்துக்கொள்ள கூடாது
5.சுகர் பேஷண்டுகள் சிறுதானியங்களை தனியாக வேக வைத்து சாப்பிடலாம்.
6.ஆனால்,சிலர் ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்களை பாலில் கலந்து குடிப்பர் .ஆனால் அவை ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும்.
7.சில சர்க்கரை நோயாளிகள் வெளியே செல்லும்போது பழச்சாறு குடிப்பர் . இதை தவிர்த்து விடுவது நல்லது.
8.செயற்கையாக தயாரிக்கப்பட்ட பழஜூஸ்கள் உங்களின் ரத்த சர்க்கரை அளவை உயர்த்திட வாய்ப்புள்ளது
9.செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்களில் நார்ச்சத்து இருக்காது. தவிர்ப்பது நல்லது.
10.சர்க்கரை நோயாளிகள் வடை, சமோசா, பக்கோடா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
11.அந்த எண்ணெய் பலகாரத்தில் உள்ள கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உங்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். .
12.மேலும் சர்க்கரை நோயாளிகள் பரோட்டா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
13.சுகர் பேஷண்டுகள் மைதா உணவை எடுத்து கொண்டால் ,அதிலுள்ள அதிகளவிலான கார்ப்போ ஹைட்ரேட்,உங்களின் சர்க்கரை அளவை அதிகரித்து விடும்