தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் தாக்கத்தால் வடமாவட்டங்களில் கனமழை பேரழுத்தமாக தொடர்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதி அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் என மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் அருகே உள்ள சுழற்சியும் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 21-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை. திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை.
22-10-2025: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை சாத்தியம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28°செ., குறைந்தபட்சம் 25°செ. வரை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
20 முதல் 23 வரை தென்தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை கடும் காற்று, இடையிடையே 55 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?