2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!
WEBDUNIA TAMIL October 20, 2025 09:48 PM

இஸ்ரோ இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடர்ந்து புதிய விண்வெளி மையத்தை அமைக்க உள்ளதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பேட்டி அளித்த அவர் “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆளிள்ளா ராக்கெட்டுகள் அனுப்பி சோதனை செய்யப்படும். முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் அனுப்பி சோதனை செய்யப்படும். 2027 தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

2035ம் ஆண்டில் இந்தியாவிற்கென தனி விண்வெளி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 52 டன் எடைக் கொண்ட விண்வெளி மையத்தின் பகுதி 2028ம் ஆண்டில் ஏவப்படும். அதன் பின்னர் நான்கு ராக்கெட்டுகள் மூலம் மற்ற பகுதிகளும் அனுப்பப்பட்டு விண்வெளி மையம் தயாராகும்” என தெரிவித்தார்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.