நாளை தீபாவளியன்று கனமழை... புதுச்சேரியை அடுத்தடுத்து தாக்கப் போகும் 3 புயல்கள்!
Dinamaalai October 20, 2025 09:48 PM

நாளை தீபாவளியன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ளன புதுவையிலும் தீபாவளி நேரத்துல கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்தடுத்து 3 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட அதிக மழையுடன் அமைய வாய்ப்புள்ளதாக புதுச்சேரி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், “புதுவையில் ஆண்டுதோறும் சராசரியாக 1,330 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. இதில் பெரும்பாலான மழை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் தான் பதிவாகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்திலேயே இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பை விட 173.4 மி.மீ. அதிகம். தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையும் அதிக மழையுடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என அவர் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்துகூறுகையில், “இந்த ஆண்டு அக்டோபர் 3வது வாரத்திலிருந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை 2 முதல் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனால், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பத்திரமா இருங்க மக்களே.. மழைக் காலங்களில் மின் சாதனங்களை கவனமுடனும், பாதுகாப்புடனும் கையாளுங்க. முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை  மழைக் காலங்களில் தனியே வெளியே அனுப்பாதீங்க.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.