திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்
WEBDUNIA TAMIL October 21, 2025 08:48 PM

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராட்சத பலம் கொண்ட திமுகவை எதிர்கொண்டு வீழ்த்த, அதிமுக கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும் என்பதே இரு கட்சித் தொண்டர்களின் வலுவான விருப்பமாக உள்ளது என்று உதயகுமார் தெரிவித்தார்.

ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், த.வெ.க.வை 'ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.அரசியல் தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவர் சில எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டினார்:

நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வியை சந்தித்தார். ஆனால், அவரது சகோதரரான பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால்தான், இன்று ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ளார்.

சரியான முடிவை எடுக்க தவறியதால்தான் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டணி விவகாரங்களில் அதிமுக மிக துல்லியமாக சரியான பாதையில் பயணிப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவரே சிறந்த தலைவர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.