தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்துள்ள 3,240 பார்களும் தினசரி ரூ.120 முதல் ரூ.130 கோடி வரையிலான மதுவிற்பனையைப் பதிவு செய்து வருகின்றன. வார இறுதி நாட்களில் இது ரூ.150 கோடி வரை அதிகரிக்கிறது. பண்டிகை நாட்களில் மதுவிற்பனை வழக்கத்தை விட சுமார் 15 சதவீதம் உயர்வது வழக்கம்.
கடந்த ஆண்டு தீபாவளி நாளில் ரூ.438 கோடி மதுவிற்பனை நடைபெற்றிருந்தது. இந்த ஆண்டு அதனை விட அதிகமான ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட தாண்டி மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சம் மதுவிற்பனை நடந்துள்ளது. இதில் அக்டோபர் 18ஆம் தேதி ரூ.230 கோடி, 19ஆம் தேதி ரூ.293 கோடி மற்றும் தீபாவளி நாளான 20ஆம் தேதி ரூ.266 கோடி மதுவிற்பனை பதிவாகியுள்ளது.
மண்டல வாரியாக பார்க்கும்போது, மதுரை மண்டலமே முன்னிலையில் இருந்து ரூ.170 கோடியே 64 லட்சம் மதுவிற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.150 கோடி மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இந்த தீபாவளி, டாஸ்மாக் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!