சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (22ஆம் தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (23ஆம் தேதி) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 24ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.