9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!
WEBDUNIA TAMIL October 21, 2025 08:48 PM

பெங்களூருவின் சுங்கடக்கட்டே பகுதியில் உள்ள புனித மேரிஸ் பொது பள்ளியில், 9 வயது மாணவர் நயன் கௌடா சி.எஸ். என்பவரை பள்ளியின் தலைமையாசிரியர் ராகேஷ் குமார், பிளாஸ்டிக் பி.வி.சி. குழாயால் கொடூரமாக தாக்கியதாக அவரது தாய் திவ்யா சங்கர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின்போது, ஒரு ஆசிரியை சிறுவனை பிடித்துக் கொண்டதாகவும், பள்ளி உரிமையாளர் விஜயகுமார் அங்கே இருந்தும் தாக்குதலை தடுக்கவில்லை என்றும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலில் சிறுவன் காயமடைந்துள்ளான்.

இது குறித்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் மிரட்டியதாகவும், மாற்று சான்றிதழை பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு கூறியதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரியுள்ள அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மருத்துவ பரிசோதனை மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.