ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளதாக பரவிய குற்றச்சாட்டுகளுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
மங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது:
"ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது கர்நாடக அரசு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. தடை குறித்ததாக வெளியான உத்தரவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
"பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு அனுமதி கோருவது தொடர்பாகவே இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, அனைத்து அமைப்புகள் மற்றும் சங்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன."
"நாங்கள் தற்போது வலியுறுத்தி இருப்பது, முன்னர் பா.ஜ.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான். அவர்களால் அதை கடைப்பிடிக்க முடிந்தால், ஏன் நம்மால் முடியாது?" என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
சட்டம்-ஒழுங்கு நிலையை அடிப்படையாக கொண்டே வளாகங்களில் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Edited by Siva