பழங்களின் ராஜாவான மாம்பழம், உடல் ஆரோக்கியத்திற்கு (Health) பல வகைகளில் நன்மை தரும். மாம்பழத்தை போலவே, அதன் இலைகளும் ஆரோக்கியத்தையும் சுவையையும் தருகின்றன. இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் ஈ போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், இதய நோய்களின் (Heart Disease) அபாயத்தை குறைக்கவும், ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியை பராமரிக்கவும் உதவும். சாறு நிறைந்த மாம்பழத்தை உங்களால் கோடை காலத்தில் மட்டுமே சாப்பிட முடியும் ஆனால், அதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் டீயை நீங்கள் தினந்தோறும் எடுத்து கொள்ளலாம். மாமர இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் டீயை குடிப்பதன் மூலம் என்ன அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கிடைக்கும். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: உடலில் இரும்புச்சத்து குறைவா..? சரி செய்ய உதவும் சைவ உணவுகள்!
மாமர இலை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: சர்க்கரை நோய்:மா இலைகளில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. மா இலையில் மாங்கி ஃபெடின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடும். இதை பயன்படுத்துவதற்கான ஒரு வழி மா இலைகலை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
ஆக்ஸிஜனேற்றிகள்:மா இலைகளில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதன் மூலம் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.
செரிமானம்:மா இலை டீயில் உள்ள நொதிகள் மற்றும் நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும், மா இலை டீ கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.
இதய ஆரோக்கியம்:மா இல டீ கொழுப்பின் அளவை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஹைப்போலிபிடெமிக் பண்புகள் கெட்ட கொழுப்பை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ALSO READ: மீன் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா..? இது புட் பாய்சனை உண்டாக்குமா?
எடை குறைப்பு:மா இலை டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டீ குடிப்பது பசியை கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள நொதிகள் மற்றும் உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் செரிமானத்தை மேம்படுத்து உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.