Parasakthi: போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா!.. திடீர் தளபதி இப்படி மாட்டிக்கிட்டாரே!....
CineReporters Tamil October 26, 2025 05:48 AM

தொலைக்காட்சியில் ஆங்கராக வேலை செய்து அதன்பின் சினிமாவுக்கு போனவர் சிவகார்த்திகேயன். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து உச்சம் தொட்டிருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றி இவரை கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது. அதுமட்டுமில்லாமல் மிகவும் குறைவான வருடங்களில் தனக்கு முன்பே சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களை ஓரம் கட்டி மேலே வந்தார் சிவகார்த்திகேயன்.

அதோடு ரஜினி, விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அவரின் அமரன் படம் 300 கோடி வசூலை பெற்றது. அதன்பின் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படம் 100 கோடி வசூலை அள்ளியது. தற்போது பராசக்தி படத்தில் நடித்த முடித்திருருக்கிறார் சிவகார்த்திகேயன். அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஒருபக்கம் சிவகார்த்திகேயனை சுற்றி அவ்வப்போது சில சர்ச்சைகளும் வருவதுண்டு. பெரும்பாலும் அதற்கு அவர் விளக்கம் கொடுப்பதில்லை. இந்நிலையில்தான் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிவகார்த்திகேயன் சிக்கி இருக்கிறார். பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் இலங்கையில் நடந்தது.

அப்போது ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் அங்கே சென்றிருந்தபோது இலங்கை சுற்றுலாத் துறையை சேர்ந்த சில அதிகாரிகள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சரி நமக்கு மரியாதை செய்கிறார்கள் என நினைத்து அவர்களும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அதன்பின் இலங்கையை சுற்றுலா துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர படமாக, அதாவது இலங்க சுற்றுலாத்துறையை புரமோட் செய்வதற்காக அந்த புகைப்படங்களை இலங்கை அரசு பயன்படுத்த தொடங்கி விட்டது.

இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். ‘தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இவர்கள் விளம்பர படங்களில் நடிக்கலாமா? அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?’’ என்றெல்லாம் பொங்கி வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.