
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' புயல், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 27ஆம் தேதி புயலாகவும், 28ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மோந்தா' புயல் வரும் அக்டோபர் 28ஆம் தேதி மாலை அல்லது இரவில் ஆந்திர கடலோர பகுதிகளில், காக்கிநாடாவிற்கு அருகில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வரை இருக்கும்.
புயல் காரணமாக, ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், தமிழ்நாட்டின் சென்னை உட்பட வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அக். 25 முதல் 28 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அக். 27ஆம் தேதி ஆந்திராவின் ராயலசீமாவில் அதி கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran