மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் மமீதா பைஜு. பிரேமலு படத்தில் இவரின் அழகையும், துருதுருப்பான நடிப்பையும் பார்த்து இளசுகள் சொக்கி போனார்கள். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.2017ம் வருடம் முதல் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் கழித்துதான் இவருக்கு பிரேமலு பட வாய்ப்பு கிடைத்தது. ஜிவி பிரகாஸுடன் ரெபல் என்கிற படத்திலும் மமிதா நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெருசாக பேசப்படவில்லை.
அதன்பின் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த டியூட் திரைப்படம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. ஜாலியான, கலகலப்பான காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள டூயட் படத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட இந்த கால 2கே கிட்ஸ்களில் ஒருவராக மமீதா பைஜூ அசத்தியிருந்தார்.

நிஜ வாழ்க்கையிலும் மிகவும் ஜாலியான, துருதுவென வலம் வருகிறார் மமிதா பைஜூ. எனவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். இவருக்காகவே படம் பார்க்கலாம் என்கிற அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். ஒருபக்கம் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் புதிய படத்தில் மமிதா பைஜுதான் கதாநாயகி. இது தனுஷின் 54வது திரைப்படமாகும். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.என்னவெனில். பிரேமலு, டியூட் ஆகிய படங்களில் மமிதா பைஜூவை ரசிகர்கள் ரசித்தது போல இந்த படத்தில் ரசிக்க முடியாது என்கிறார்கள்.
ஏனெனில், முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக மாறியிருக்கிறாராம் மமீதா பைஜூ. டல் மேக்கப் போட்டு அடையாளமே தெரியாத அளவுக்கு மமீதாவை மாற்றி இருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா. எனவே இந்த படத்தில் மமிதா பைஜூவை ரசிகர்கள் ரசிப்பார்களா என்பது படம் வந்த பிறகே தெரியவரும்.