சமூக வலைதளங்களில் அடிக்கடி பலர் ஆபத்தான ஸ்டண்ட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், சில நேரங்களில் அந்தச் ஸ்டண்ட்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தும் நிலைக்கும் தள்ளிவிடுகின்றன. அப்படிப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் சிறிது சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் ஒருவர் தீயை ஊதினார்.
ஆனால் சில விநாடிகளில் அந்தச் செயல் அவரையே எரித்தது. அதாவது பெண்ணின் வாயில் தீப்பற்றி, அருகில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அதை அணைக்க முயன்றனர். சில நொடிகளுக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வீடியோவில் அந்தப் பெண் தீ பற்றிய குச்சியைப் பிடித்து, வாயில் பெட்ரோல் வைத்திருப்பது தெரிகிறது. அதை ஊதி தீ மிதக்கச் செய்ய முயன்றவுடன், எதிர்பாராதவிதமாக தீ அவரது வாயிலேயே பற்றிக் கொண்டது. சில நொடிகளில் அந்த தீ மோசமாகப் பரவ, அவர் பதறி கத்தி அலறினார். உடனே அருகில் இருந்த மற்றொரு பெண் ஓடி வந்து தீயை அணைத்தார். இந்தக் காட்சி நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வீடியோவை @bipinyadav8933 என்ற பயனாளர் “டிடி நிகழ்ச்சியில் ஸ்பைஸ் சேர்க்க நினைத்தார்… ஆனா தீ வேற இடத்திலே பற்றியது!” என்ற நகைச்சுவையான தலைப்புடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 98,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.
“சில நேரங்களில் அளவுக்கு மீறிய தைரியம் ஆபத்தாக மாறும்” என ஒரு நெட்டிசன் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், “இது பிறகு டிடி இனி தீ ஸ்டண்ட் செய்ய மாட்டார்!” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்தார்.