தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக். 25ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.
அடுத்து வரும் அக். 25/26 வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த மாத இறுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சக்கரமாக(புயலாக) வலுவடைய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் (நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை), ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?