புதிதாக, கூகுள் கிளவுட் பிரிவில் தலைமை நிலை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக கார்த்திக் நரேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூகிள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கூறியதாவது:
“இன்று நாம் கார்த்திக் நரேனை கூகுள் கிளவுட்டின் தலைமை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக வரவேற்கிறோம். AI, கிளவுட், டெவலப்பர் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர். இவருடைய அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு கலந்த அணுகுமுறை, கூகுள் கிளவுட் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த AI பயன்பாட்டைக் கொடுக்க உதவும்," என கூறியிருக்கிறார்.
சுந்தர் பிச்சை கூறியதாவது:
“கார்த்திக் நரேன் கூகுள் கிளவுட் வளர்ச்சிக்கு AI துறையில் பல மாற்றங்களை இவரால் கொண்டு வர முடியும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்,” என்று தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் நம் ஊர்பையன்தான். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் மற்றும் வணிகத் துறையில் பட்டங்களைப் பெற்றார்.
'Accenture' நிறுவனத்தின் உலகளாவிய தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவியில் பணியாற்றினார்.
அதற்கு முன் 'HCLTech' மற்றும் 'Infosys' நிறுவனங்களிலும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். பல உலகளாவிய நிறுவனங்களுக்கு கிளவுட் மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான ஆலோசகராகவும் இருந்தார்.
இப்போது, கூகுள் கிளவுட் தயாரிப்புகள், டெவலப்பர் டூல்ஸ், டேட்டா & செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய பிரிவுகளின் தயாரிப்பு மற்றும் எஞ்சினீயரிங் குழுக்களை வழிநடத்தும் தலைமை நிலை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக பணியாற்ற தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார்.
அரவிந்த் ஶ்ரீனிவாஸ் (Perplexity AI), அஷோக் எல்லுசுவாமி (டெஸ்லா), விவேக் ரவிசங்கர் (HackerRank), சுவாமி சிவசுப்ரமணியன் (Amazon Agentic AI) என டெக் உலகை ஆளும் தமிழர்கள் பட்டியலில் இப்போது கார்த்திக் நரேனும் சேரப்போகிறார்.
'சென்னை அரவிந்த் ஶ்ரீனிவாஸ் முதல் திண்டுக்கல் மகரிஷி வரை' - டெக் உலகை ஆளும் தமிழர்கள் லிஸ்ட்