பழிக்கு பழி... 2 இளைஞர்கள் மீது கொலை முயற்சி.!! 3 பேர் கைது.!!
Tamilspark Tamil October 23, 2025 03:48 AM

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள காரமடை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது கமலக்கண்ணன் ஜாமீன் மூலம் சிறையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்தார். தினந்தோறும் மாலை காவல் நிலையத்தில் சென்று கையெழுத்திட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், சம்பவம் நடந்த அன்று நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சஞ்சய் குமரன் உறவினர்கள் கமலக்கண்ணனை கொலை செய்ய வேண்டுமென அவரை பின்தொடர்ந்து 13ம் தேதி அன்று மாலை கமலக்கண்ணன் கையெழுத்திட வந்த இடத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை வழிமறித்து தாக்க முயற்சித்தனர். பழித்தீர்க்கும் முனைப்பில் கத்தியை எடுத்து கமலக்கண்ணனை குத்த முயற்சி செய்தனர். அவர்கள் தப்பிக்க முயன்ற போது ரெஸ்டாரன்ட் அருகே இருவரையும் அரிவாளால் பயங்கரமாக வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் மற்றும் கமலக்கண்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை வெட்டிய குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடினர். பின்னர் காரமடை பகுதியை சேர்ந்த அரவிந்தன் (24), பிரகாஷ்(25), கிருஷ்ணராஜ்(45), சுந்தர்ராஜ்(51) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்கு பழி வாங்கும் நோக்கில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் படுகொலை.!! கொலையாளி பகீர் வாக்குமூலம்.!!

இதையும் படிங்க: "விவாகரத்து கேட்ட மனைவி..." நடு ரோட்டில் பிளேடால் வெட்டிய கணவன்.!! நீதிமன்றம் அருகே பரபரப்பு.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.