Biggboss Tamil Season 9: பிக்பாஸ் விவரமாத்தான் ஜூஸ் டாஸ்க்கை கொடுத்திருக்காரு.. கானா வினோத்தை எட்டி மிதிக்க போன ஆதிரை.. கனி சொல்வதை காதிலேயே வாங்காத பாரு.. திவாகருக்கே எரிச்சலான பாருவின் ஆட்டிடியூட்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?
Tamil Minutes October 23, 2025 06:48 AM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஒரு சாதாரண டாஸ்க், ஒட்டுமொத்த வீட்டையும் கொழுந்துவிட்டு எரிய செய்துள்ளது. ஜூஸ் தயாரிக்கும் டாஸ்கின் போது, போட்டியாளர்களான ஆதிரைக்கும் கானா வினோத்துக்கும் இடையே வெடித்த மோதல், வார்த்தை வரம்புகளை தாண்டி, உடல்ரீதியான வன்முறை முனைக்கு சென்றது பார்வையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஜூஸ் தயாரிக்கும் டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்தார். தயாரிக்கப்பட்ட ஜூஸை, குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர்களாக நியமிக்கப்பட்ட பார்வதி மற்றும் திவாகரிடம் கொடுத்து, ஐந்து தரங்களின் அடிப்படையில் ‘செலக்ட்’ அல்லது ‘ரிஜெக்ட்’ செய்ய வேண்டும்.

உண்மையில், கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ், “ஷோ தொடங்கி 15 நாட்களாகியும் எந்த ‘கண்டென்ட்டும்’ இல்லை, எனவே உங்களால் முடிந்த அளவுக்கு சண்டை போட்டு, கண்டென்ட் கொடுங்கள்” என்று குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர்களுக்கு ஒரு மறைமுக அறிவுறுத்தலை வழங்கியிருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, பார்வதியும் திவாகரும் அதிக ஜூஸை ரிஜெக்ட் செய்து கீழே ஊற்றினர். இதனால் கடுப்பான போட்டியாளர்கள், மேனேஜர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக சண்டையிட தொடங்கினர். இதில் கலையரசன் போன்ற சில போட்டியாளர்கள் சேர், டேபிள்களை தூக்கி போட்டு அட்டகாசம் செய்தனர். இந்த டாஸ்க்கின் போதுதான் ஆதிரைக்கும் கானா வினோத்துக்கும் இடையே மோதல் மூண்டது.

தரையில் சௌகரியமாக அமர்ந்திருந்த கானா வினோத்தின் கால், ஆதிரையின் ஜூஸ் பாட்டிலின் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சண்டை போட தொடங்கிய ஆதிரை, விவாதம் முற்றிய நிலையில், திடீரென காலை ஓங்கி, கானா வினோத்தின் முகத்தை நோக்கி உதைக்க சென்றார். வினோத் சுதாரித்து எழுந்து, “என் கால் மேல் நான் கால் போடுவதில் உனக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது.

சாதாரண வாக்குவாதத்தை உடல்ரீதியான வன்முறைக்கு தூண்டிய ஆதிரையின் செயலை விமர்சித்த பார்வையாளர்கள், ‘ஃபேக் ஃபெமினிசம்’என்ற போர்வையில் செயல்படுவதை கடுமையாக சாடினர்.

“இதே இடத்தில், ஒரு ஆண், ஒரு பெண்ணை எட்டி உதைக்க காலை ஓங்கியிருந்தால், ‘முற்போக்கு கும்பல்’ என சொல்லிக்கொள்ளும் இந்த ஃபேக் ஃபெமினிஸ்ட் குழுவினர் ஆவேசமாக பேசியிருப்பார்கள். ஆனால், இப்போது ஒரு பெண் ஒரு ஆணை உதைக்க சென்றதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. இது இரட்டை வேடத்தின் வெளிப்பாடு” என்று விமர்சனங்கள் எழுந்தன.

குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர்களாக இருந்த பார்வதிக்கும் திவாகருக்கும் இடையே டாஸ்க் அணுகுமுறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பார்வதி பிக் பாஸ்-ன் குறிப்பைப்புரிந்துகொண்டு ‘கண்டென்ட்’க்காக ஜூஸை ரிஜெக்ட் செய்ய முயன்றார். ஆனால் திவாகர் மற்ற போட்டியாளர்களின் செல்வாக்கிற்கு ஆளாகி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினார். இதனால், ‘அண்ணன்-தங்கை’ பந்தத்துடன் இருந்த இருவருக்கும் இடையே பெரும் சண்டை வெடித்தது.

அதேபோல் பாருவின் செயல்பாடுகளை ஒரு கேப்டன் என்ற முறையில் கனி கண்டித்தார். ஆனால் பாரு, கனி சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் சொன்னதையே சொன்னது வெறுப்பின் உச்சகட்டமாக இருந்தது. இந்த பாருவை முதலில் வெளியேற்றுங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு அவர் நடந்து கொள்கிறார்.

மொத்தத்தில், இந்த டாஸ்க் ஆதிரையின் மற்றொரு முகத்தைக் கிழித்ததாகவும், அவர் கானா வினோத்தை வேண்டுமென்றே அவமதிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தப் போக்குக்கு பிக் பாஸ் நிர்வாகம் மற்றும் வார இறுதி தொகுப்பாளரான விஜய் சேதுபதி தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.