தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2025-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட மொத்தம் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற ஒரே கட்டத் தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர். ஒரு இடத்திற்குச் சுமார் 250 பேர் போட்டியிட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பின்படி செப்டம்பர் மாத இறுதியில் மேலும் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் மொத்த பணியிடங்கள் 4,662 ஆக உயர்ந்துள்ளன.
தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம். முடிவுகளுக்குப் பிறகு, கட்-ஆஃப் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். பின்னர், மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்புகள் வழங்கப்படும். சரிபார்ப்பு முடிந்ததும் தகுதியானவர்கள் நேரடியாக பணி நியமனம் பெறுவார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!