Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert?
Vikatan October 23, 2025 03:48 AM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக மாறவுள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால்தான், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்து வருகிறதாம்.

மழை நாளை

நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள்

நாளை மறுநாள் (அக்டோபர் 24) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.