நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் பலமே அவர் ரசிகர்கள்தான். அதனால்தான் விஜய் படங்கள் 500 கோடி, 600 கோடி என அசால்டாக வசூல் செய்கிறது. அதனால்தான் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் 200 லிருந்து 250 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார்கள்
ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த விஜய் ஒரு கட்டத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்தார். ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூல் செய்ததால் ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார். எனவே அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சிலர் திரையுலகில் பேசினார்கள். அதன் பின்னர்தான் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதலே துவங்கியது.
விஜய் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவரின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் எந்த அளவுக்கு வாக்களிப்பார்கள் என்பதை பொறுத்தே அவர் சினிமாவில் நடிப்பாரா? இல்லை அரசியலில் நடிப்பாரா/ என்பது தெரியவரும்.விஜயின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் விருந்தாக 2026 ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விஜயின் ரசிகர்கள் தற்போது பல இடங்களிலும் TVK.. TVK என சத்தம் போடுகிறார்கள். சீமான் கூட இதை வைத்து கலாய்த்திருந்தார்.இந்நிலையில் சர்வதேச யூடியூப் பிரபலம் ஸ்பீட் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை பைக்கில் துரத்திய இரண்டு விஜய் ரசிகர்கள் TVK.. TVK என அவரிடம் கத்தினார்கள். எதுவும் புரியாமல் முழித்த Spedd 'அப்படி என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் 'தளபதி விஜய்.. தளபதி விஜய்' என்றார்கள். ஆனால் அப்போதும் ஸ்பீடுக்கு புரியவில்லை. புரியாமலே சென்று விட்டார்’.. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.