 
             
 
Vishal: கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளராக இருந்தால் சுலபமாக சினிமாவுக்கு வந்துவிட்டார். திமிரு, சண்டக்கோழி ஆகிய படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.விஷால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் நடிகர் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. மார்க் ஆண்டனி படம் மட்டுமே ஓடியது..
ஒருபக்கம் ஐங்கரன், ஈட்டி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்கிற படத்தில் விஷால் நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ரவி அரசுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில்தான் தீபாவளி அன்று இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஷால் இந்த படத்தை தானே இயக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இது அவருக்கும் ரவி அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியதை காட்டியது.இந்நிலையில்தான் இது தொடர்பான ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

விஷாலை சமாதானப்படுத்த நினைத்த ரவி அரசு தனது மனைவியை அழைத்துக்கொண்டு விஷாலை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் வீட்டுக்குள்ளேயே அவரை விடாமல் சில மணி நேரங்கள் வெளியே காக்க வைத்தாராம் விஷால். அதன்பின் வேறு வழியின்றி அங்கிருந்து சென்றுவிட்டாராம் ரவி அரசு.
இதை கேள்விப்பட்டு கொதிப்படைந்த இயக்குனர் சங்கம் ‘நீங்கள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள்.. நடவடிக்கை எடுக்கிறோம்’ என சொல்லியும் ரவி அரசு அதை செய்யவில்லை. ஏனெனில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் முக்கிய பதவியிலும் இருப்பவர் விஷால். அவர் மீதே புகார் கொடுத்தால் மற்ற நடிகர்கள் தன்னுடைய இயக்கத்தில் நடிக்க முன்வர மாட்டார்கள். இது தனது எதிர்காலத்தையே பாதிக்கும் என கருதும் ரவி அரசு எந்த புகாரும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறாராம்.விஷால் செய்தது மிகப்பெரிய அராஜகம் என சில இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் திரையுலகில் பொங்கி வருகிறார்கள்.