
கேரளா தோன்றிய தினமான நவம்பர் 1 அன்று, அம்மாநிலத்தை வறுமையற்ற மாநிலமாக முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், பிரபல நடிகர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். எதிர்க்கட்சி தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனை குறித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் மற்றும் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, "தீவிர வறுமையை ஒழித்ததன் மூலம், கேரளா இந்த இலக்கை அடைந்த நாட்டின் முதல் மாநிலம் மற்றும் உலகிலேயே இரண்டாவது பிராந்தியம் என்ற பெருமையைப் பெறுகிறது" என்று தெரிவித்தனர்.
தீவிர வறுமை என்பது உணவு, இருப்பிடம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையை குறிக்கிறது. உலக வங்கி இதை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.180க்கும் குறைவான செலவில் வாழ்வது என வரையறுக்கிறது. இந்த சாதனையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran