
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில், மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பெண் வாக்காளர்களைக் கவரும் விதமாகப் புதிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி, தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வெறும் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" என்ற முக்கிய வாக்குறுதியை அவர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பீகார் மக்களுக்குச் சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
முந்தைய ஆட்சிகள் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த தேஜஸ்வி யாதவ், "இந்தியக் கூட்டணி வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருந்து, பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை வழங்குவேன்," என்று திட்டவட்டமாகக் கூறினார்.
Edited by Mahendran