அரியானா மாநிலத்தின் குர்கான் மாவட்டத்தில் சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஜார்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகித் குமார் (வயது 23), அனுஜ் குமார் (வயது 25) ஆகியோர், தார் வகை காரில் சென்று கொண்டுருந்தபோது, காரை நிறுத்தாமலே கதவைத் திறந்து சாலையில் சிறுநீர் கழிக்கப்பட்டது. இந்த செயல் பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. இதனால் விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
“>
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அனுஜ் கார் ஓட்டியவர் என்றும், மோகித் கதவைத் திறந்து காரிலிருந்து சிறுநீர் கழித்ததும் உறுதி செய்யப்பட்டது.
“>
மேலும், மோகித் குமாருக்கு முன்பே கொலை, தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருத்தல் போன்ற பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், கடந்த 2022 டிசம்பரிலிருந்து ஜாமினில் உள்ளவராகவும் தெரியவந்தது. அனுஜ் மீது இதற்கு முந்தைய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்