வட அமெரிக்காவிற்கு உட்பட்ட கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு, தற்போது ‘மெலிசா’ புயலின் தாக்கத்தால் அச்சத்தில் உள்ளது. புயல் தாக்கம் காரணமாக அந்த நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம், 11 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் மற்ற 11 மாகாணங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது. கடும் மழை தொடரும் நிலையில், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவசர தங்குமிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.

புயல் கரையை கடக்கும் போது இன்னும் கனமழை பெய்யக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், டொமினிகன் குடியரசு அதிபர் லூயிஸ் அபிநாடேர் அறிவுறுத்தியுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!