வரும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திற்குப் பிறகு தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வுத் திட்டத்தை முன்னதாக அறிந்து தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது