
சிங்கப்பூரில் உள்ள ரஃபிள்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய செவிலியரான எலிபே சிவ நாகு , பாலியல் தொல்லை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஓராண்டு மற்றும் இரண்டு மாத சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், மருத்துவமனைக்கு வந்த ஒரு ஆண் பார்வையாளரை 'நோய்த்தொற்று நீக்கம்' செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி, எலிபே கழிவறையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்திற்கு பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எலிபே சிவ நாகு, இரண்டு நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு வெள்ளிக்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது.
Edited by Mahendran