கப்பு முக்கியம் பிகிலு… 6 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் பிகில் படம்!
TV9 Tamil News October 25, 2025 11:48 PM

நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் கடந்த 25-ம் தேதி அக்டோபர் மாதம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பிகில். இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லி குமார் எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், டேனியல் பாலாஜி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், யோகி பாபு, ஐ.எம்.விஜயன், இந்துஜா ரவிச்சந்திரன், அமிர்தா ஐயர், ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா சங்கர், காயத்ரி ரெட்டி, ஆதிரை சௌந்தரராஜன்,
கனிமொழி, ஷோபனா, வினயா சேஷன், ரித்தி ரமேஷ், தேவதர்ஷினி, ரோகிணி, ஜி.ஞானசம்பந்தம், ராமா, நமோ நாராயணா, சாய் தீனா, மனோபாலா, சௌந்தரராஜா, அபி சரவணன், அஜய் ராஜ், ஸ்ரீஜித் ரவி, பிரஜுனா சாரா, டி.எம்.கார்த்திக், ஜார்ஜ் மரியன், மேத்யூ வர்கீஸ், அனிஷ் குருவில்லா, தன்வி ஹான்ஸ், அருண் வேணுகோபால், ராமன் விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

விஜயின் பிகில் படத்தின் கதை என்ன?

நடிகர் விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதில் அப்பா ராயப்பன் ஒரு கேங்ஸ்டராக நடித்து இருந்த நிலையில் மகன் மக்கேல் ராயப்பன் ஃபுட் பால் வீரராக நடித்து இருந்தார். தனது அப்பாவை எதிரிகள் கொலை செய்தபிறகு விளையாட்டை விட்டுவிட்டு அவரது தொழிலையே மக்கேல் செய்துவந்தார். இந்த நிலையில் ஃபுட்பால் டீமில் இவருடன் இருந்த கதிர் பெண்கள் குழு ஃபுட்பால் டீமை நடந்தி வந்தார். அதற்கு மக்கேல் தான் பல உதவிகளை செய்து இருப்பார்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கதிர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த பெண்கள் டீம் நேஸ்னல் லெவல் கேமில் விளையாட சென்றபோது அவர்களுக்கு கோச்சாக மைக்கேல் செல்கிறார். அப்போது முன்னதாக மக்கேல் மீது வன்மத்தில் இருக்கும் ஜாக்கி ஷெராப் அந்த பெண்கள் அணியை வெற்றிபெறவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார். இதனைக் கடந்து விஜய் அந்த பெண்கள் அணியை எப்படி வெற்றியடையச் செய்கிறார் என்பதே படத்தின் கதை.

Also Read… ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது – நடிகர் விஷ்ணு விஷால்

பிகில் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Celebrating 6 Years of “Cup Mukkiyam Bigilu” 💥#6YearsOfBigil #KalpathiSAghoram #KalpathiSGanesh#KalpathiSSuresh

Thalapathy @actorvijay sir @Atlee_dir @arrahman @NayantharaU @archanakalpathi @aishkalpathi @SonyMusicSouth pic.twitter.com/AlgkCzWaFS

— AGS Entertainment (@Ags_production)

Also Read… ஒவ்வொரு படத்திலும் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது – பைசன் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.