கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ராஜ சூடாமணி பகுதியில் நேற்று மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் விவசாயி சுப்பிரமணியன் (53) உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ராஜ சூடாமணி பகுதியில் நேற்று மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் விவசாயி சுப்பிரமணியன் (53) உயிரிழந்தார். இவர் விவசாய கூலி தொழிலாளி ஆவார். நேற்று விவசாய பணிக்காக வெளியில் சென்ற இவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடித்தேடி வந்த நிலையில், இன்று காலை விவசாய நிலத்தில் சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவருக்கு சுதா மற்றும் ஜெயந்தி என இரண்டு மனைவிகள், 5 பிள்ளைகள் உள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.