
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மோன்தா புயலாக வலுவடைய உள்ளது. அதையொட்டி வட தமிழக பகுதிகளில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருபத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K