விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ல் அடுத்த வாரம் வைல்டு கார்டு வாரமாக இருக்கும்போல் தெரிகிறது.
வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.
நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.
பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறினர். இந்த வாரம் அதாவது இன்று ஆதிரை வெளியேற இருக்கிறார்.
Bigg Boss Tamil 9
முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. அது நிஜம்தான் போலத் தெரிகிறது. ஏனெனில் டிவி நடிகர் நடிகைகள் சிலர் அடுத்த சில தினங்களில் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் செல்லவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முதல் முறையாக கணவன் மனைவியாக பிரஜின் சாண்ட்ரா ஜோடி செல்லவிருப்பதை நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.
தற்போது பாக்யலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷும் பிக் பாஸ் செல்லவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
நிகழ்ச்சியில் ஏற்கெனவே இருக்கும் கமருதீனுடன் சீரியலில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.
divya ganesh
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே சில தினங்களுக்கு முன் அந்த தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
அநேகமாக இன்று அல்லது வரும் வாரத்தில் பிரஜின் சாண்ட்ரா மற்றும் திவ்யா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் எபிசோடுகள் ஒளிபரப்பாகலாம் எனத் தெரியவருகிறது.
வைல்டு கார்டு என்ட்ரியில் யார் உள்ளே வருவது ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!