மோந்தா புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வலுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இன்று மதியத்திற்குப் பிறகு திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாளை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், நாளை மறுநாள் வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்