அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
குற்றச்சாட்டுஅதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிட்டத்தட்ட ரூ.32,000 கோடி முதலீடுகளை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பரிந்துரையை முன்னெடுத்தனர்... அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர் என்கிற குற்றச்சாட்டை வைத்தது.
அதானி அறிக்கை
இதற்கு பதிலளித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தி வாஷிங்டன் போஸ்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் அடிப்படையற்றது ஆகும்.
அது கூறுகின்ற மாதிரி எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான எந்தவொரு ஆவணங்களையும், திட்டத்தையும் எல்.ஐ.சி நிறுவனம் வகுக்கவில்லை.
நிதி அமைச்சகமோ, வேறு எந்தத் துறையோ இந்த முடிவுகளில் தலையிடாது.
எல்.ஐ.சி நிறுவனம் தனது அனைத்து கொள்கைகளையும், முதலீட்டு முடிவுகளையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே வகுக்கும்... மேலும் அதில் பங்குதாரர்களின் நலனும் உள்ளடக்கியிருக்கும்.
இந்தக் குறிப்பிட்ட கட்டுரை எல்.ஐ.சி நிறுவனத்தின் பெயரையும், புகழையும் கெடுப்பதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.