Breaking: வரலாறு காணாத வீழ்ச்சி! – “ஒரே நாளில் ரூ.3,000 சரிவு!… ₹90,000-க்கு கீழ் சரிந்தது”… நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி..!!
SeithiSolai Tamil October 29, 2025 08:48 AM

சென்னை, அக்டோபர் 28: ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ஒரே நாளில் மளமளவென குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சுமார் ₹3,000 குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,200 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹1,800 சரிந்து மொத்தமாக ₹3,000-ஐ தாண்டி சரிவைக் கண்டது. இந்த அதிரடி விலை குறைவுக்குப் பிறகு, சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,075-க்கும், 1 சவரன் ₹88,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ₹9,000 சரிந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் விலை மீண்டும் ₹90,000-க்கு கீழ் சென்றுள்ளது. சந்தை நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சர்வதேச காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.