பொதுவாக இந்த காலத்தில் இளைஞர் முதல் முதியவர் வரை தங்களின் அழகை பராமரிக்க பியூட்டி பார்லர் செல்கின்றனர் .இப்படி அழகு நிலையம் செல்லாமல் நம் வீட்டிலிருந்தே ,வீட்டில் இருக்கும் பொருளை கொண்டு நம் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை எப்படி நீக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நம் ஸ்கின்னுக்கு ஆரோக்கியம் தரும் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளை எடுத்து , தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும்,
2.அந்த மஞ்சள் பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் உளற விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும்.இப்படி அடிக்கடி செய்ய கரும் புள்ளி நீங்கும்
3.அடுத்து இன்னொரு முறை பற்றி பார்க்கலாம் .ஜெலட்டின்ஒரு ஸ்பூன் ,பால் 2 ஸ்பூன் ,லெமன் சாறு அரை ஸ்புன் எடுத்து கொள்வோம்
4.அடுத்து மேற்சொன்ன இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து, பின்னர் சூடான தண்ணீரின் மேல் (double boiling method) இந்த கலவை கலந்த கிண்ணத்தை வைத்து நன்றாக கலக்கவும்.
5.அடுத்து ஒரு ப்ரஷ் வைத்து கண், புருவம் மற்றும் உதடு தவிர்த்து முகத்தில் மற்ற இடங்களில் தடவவும்.
. 15 நிமிடம் ஆனதும் அது தோல் போல் உரிக்கும் பதத்திற்கு வரும்.
6.அப்போது கீழிருந்து மேலாக மெதுவாக உரித்து எடுக்கவும்.
7.இந்த பேஸ்ட் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகத்தில் உள்ள முடியையும் நீக்கிவிடும். இதை வாரம் 2 முறை செய்யலாம்.
8.அடுத்து சர்க்கரை ஒரு ஸ்புன் ,எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்,தேன் – 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
9.மேற்கூறிய இந்த மூன்று பொருளையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
10. பின்னர் அந்த பேஸ்ட் போகும் வரை தண்ணீரில் கழுவவும். இதை வாரம் 2-3 முறை செய்ய கரும் புள்ளி மறையும்