விக்கிபீடியாவுக்கு போட்டி..தரமான சம்பவம் செய்த எலான் மஸ்க்!
Seithipunal Tamil October 29, 2025 11:48 AM

விக்கிபீடியாவுக்கு போட்டியாக  குரோக்பீடியாவை  எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

இணைய தேடுதலில் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா செயல்பட்டு வருகிறது. பிரபலங்கள் ஒரு நாட்டின் விவரங்கள்  என எல்லாவிதமான தகவல்களும் இதில் கொட்டி கிடைக்கின்றன. விக்கிமீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இதை  நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த தளம் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வருவதுடன்  சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். இந்த குரோக்பீடியாவில் முழுக்க முழுக்க ஏஐ- யால் சரிபார்க்கப்பட்ட ஏஐ பதிவுகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தரவுகள் சில நேரங்களில் சார்புள்ள பதிவுகளாக இருப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், சார்பில்லாத தரவுகளை பெற குரோக்பீடியாவை நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அறிமுகம் ஆகியிருப்பது 0.1 வெர்ஷன் தான் என்றும் இதுவே விக்கிபீடியாவை விட சிறப்பானதாக இருக்கும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், கடந்த 2023-ம் ஆண்டு குரோக் ஏஐ நிறுவனத்தை தொடங்கினார். இதன் அடுத்த கட்டமாக  குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.