 
             
 
அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள், அமெரிக்காவின் வடகரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; மனைவி சந்திரபிரபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இருவருக்கும் வீட்டு சுத்தம் பற்றிய விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 12ம் தேதி மீண்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்ததாகக் கூறி இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் கடும் கோபத்தில் இருந்த சந்திரபிரபா, கையில் இருந்த சமையல் கத்தியை எடுத்து கணவன் அரவிந்தின் கழுத்தில் அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரத்தம் சிந்தி துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த அரவிந்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்குப் பின்னர் போலீசார் சந்திரபிரபாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயர சம்பவம் சார்லட் நகர இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?