 
             
 
அக்டோபர் 31ம் தேதி ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு துபாயில் பல்வேறு வணிக மையங்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் திகிலூட்டும் அலங்காரங்களும் உணவு வகைகளும் மக்களை கவர்ந்து வருகின்றன.இந்தியாவைத் தாண்டி பன்னாட்டு கலாசாரங்களைக் கொண்டாடும் துபாயில், கல்லறை, சவப்பெட்டி, எலும்புக்கூடு மற்றும் பேய் வடிவில் தயாரிக்கப்பட்ட கேக், இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பேய் மையப்படுத்தப்பட்ட அலங்காரம், இருட்டறை விளக்குகள், திகிலூட்டும் ஒலிகள் போன்றவையும் இணைத்து, விருந்தினர்களுக்கு வேடிக்கை அனுபவம் அளிக்கின்றன.

ஹாலோவீன் திருவிழாவின் தொடக்கம் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த சம்ஹைன் மதத்தை பின்பற்றிய கெல்டிக் மக்களிடம் இருந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. குளிர்கால தொடக்கம் எனக் கருதப்பட்ட இந்த நாளில், இறந்தவர்களின் ஆவிகள் வீடு திரும்புவதாக நம்பப்பட்டதால், மக்கள் தீ மூட்டி, பேய்களை விரட்டும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ‘ஆல் ஹாலோஸ் ஈவ்’ என அறியப்பட்ட இந்த விழா, ஹாலோவீன் என்ற பெயரில் பரவலாக கொண்டாடப்படத் தொடங்கியது. தற்போது துபாயிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த விழா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜாக்-ஓ-லாந்தர்ன் எனப்படும் பெரிய பூசணிக்காய்களை செதுக்கி அதில் விளக்குகள் ஏற்றி வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. சிலர் வீடுகளை பேய் வீடுகளாக மாற்றி குழந்தைகளுக்காக திகில் விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்கின்றனர்.இதன் அடுத்த கட்டமாக, துபாய் ஓட்டல்களில் நடைபெறும் ஹாலோவீன் சிறப்பு விருந்து நிகழ்ச்சிகளில் கல்லறை வடிவிலான கேக்குகள், எலும்புக்கூடு இனிப்புகள் மற்றும் பேய் வடிவிலான உணவு வகைகள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!