 
             
 
 
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங் (68) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அபாஸ்போர்டு நிறுவனத்தில் காயங்களுடன் கிடந்த தர்ஷன் சிங்கை போலீசார் மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கனடாக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.