 
             
 
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜெர்மனி நோக்கிச் சென்ற லுஃப்தான்சா விமானத்தில், நடுவானில் பயணிக்கும்போது தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
விமானம் பறந்துக் கொண்டிருக்கும்போது, இந்திய நாட்டு பயணி ஒருவர் திடீரென உணவு உண்ணப் பயன்படுத்திய உலோக ஃபோர்க்கால் மற்றொரு பயணியை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவரின் தோளில் காயம் ஏற்பட்டது. மேலும் மற்றொரு நபர் தலையில் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை தடுக்க முயன்ற விமான ஊழியர் மற்றும் மற்றொரு பயணியும் காயமடைந்தனர். இதனால் விமானத்தில் பதட்டம் நிலவியது. விமானம் உடனடியாக பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் கைதாகியவர்களின் அடையாளம் குறித்து விசாரணை முடிந்த பின் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?