வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் படத்தில் பிளாக்பஸ்டர் பட நடிகை!.. காம்பினேஷன் களை கட்டுதே!..
CineReporters Tamil October 30, 2025 04:48 AM

அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் கிராஃப் இன்னும் மேலே ஏறியது. ஆனால், அடுத்து வந்த மதராஸி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அமரன் 300 கோடி வசூல் செய்த நிலையில் மதராஸி படம் 100 கோடிக்கே முக்கியது. ஒருபக்கம் சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த பட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு பட வேலைகளும் தற்போது துவங்கியிருக்கிறது. இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் இவர் நடித்திருந்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சூப்பர் ஹிட் அடித்த மாநாடு படத்திலும் கல்யாணி நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

அதை விட சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியான லோகா சேப்டர் 1 படம் 300 கோடி வசூல் செய்தது. மலையாளத்தில் ஒரு பெண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இவ்வளவு வசூல் பெற்றது இதுவே முதல் முறை. அதை விட மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற படமாகவும் லோகா (LOKAH) இருக்கிறது. எனவே, அவரை கதாநாயகியாக போட்டால் மலையாளத்தில் வசூலை அள்ளலாம் என கணக்கு போட்டிருக்கிறார்களாம். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.