காமெடியனாக ரீ-எண்ட்ரி!.. ரஜினி படத்தில் நடிக்கும் சந்தானம்?!.. புது அப்டேட்!...
CineReporters Tamil October 30, 2025 12:48 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் தொடர்ந்து விஜய் டிவியில் சில காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன்பின் சிம்பு தான் இயக்கிய மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் தொடர்ந்து காமெடி நடிகராக பல படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. கவுண்டமணி சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நேரத்தில் அவரின் ஸ்டைலில் கவுண்ட்டர் வசனம் பேசி தனது கெரியரை பலப்படுத்திக் கொண்டார் சந்தானம். ஆர்யா, உதயநிதி, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பல இளம் நடிகர்களின் படங்களில் அவர்களின் நண்பராக வந்து காமெடி செய்தார் சந்தானம்.

ஆனால் திடீரென ‘இனிமேல் நான் காமெடியனாக நடிக்க மாட்டேன்.. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என களமிறங்கினார். கடந்த பல வருடங்களாகவே அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அதில் தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வசூலை பெற்றது. மற்ற படங்கள் எல்லாம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஆனாலும் சந்தானம் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடித்து வருகிறார்.

இடையில் சிம்பு கூப்பிட்டதால் பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ஒரு புதிய படத்தில் சந்தானம் அவருடன் இணைந்து நடிக்க முன்வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதால் அது நடக்கவில்லை. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் ர் 2 படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள். இதற்கு முன் லிங்கா, எந்திரன் ஆகிய படங்களில் ரஜினியுடன் சந்தானம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.